வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் நெசவுத் தொழிலாளியான லோகநாதன். இவரது வீட்டில் திடீரென அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த நேதாஜி என்ற 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அதேபோல் இந்த விபத்தில் இடிபாடுகளில்சிக்கிக்காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்பது வயது சிறுவன் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.