மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவரிடம் சிலுமிஷம் செய்த சபலிஷ்டு பசங்க கைது செய்திருக்கிறார்கள் திருச்சி போலிஸ்.

Advertisment

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூரை சேர்ந்தவர் அருள்குமார் மனைவி சுலோச்சனா. இவர் துறையூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை மாநில வரி அலுவலராகப் பணிபுரிகிறார். அவர் வழக்கம் போல் அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு துறையூரிலிரந்து ஓமாந்தூர் செல்லும் அரசு பேருந்தில் வழக்கமாகச் செல்வது போல் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்குன்னுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த் என்பவன் சிலிமிஷம் செய்து கொண்டே வந்திருக்கிறான்.

Advertisment

police

சுலோச்சனாவும் எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக வந்திருக்கிறார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரசாந் தன்னுடைய நண்பனான பெரியண்ணன், பரத் ஆகியோருக்கு செல்போன் மூலம் தகவல் சொல்லி கோட்டாத்தூருக்கு வர சொல்லியிருக்கிறார். சுலோச்சா கோட்டாத்தூரில் இறங்கிய போது பிரசாந்துடன் ஏற்கனவே காத்திருந்த மற்ற இரண்டு நண்பர்களும் சேர்ந்து கொண்டு சுலோச்சனைவை பின் தொடர்ந்து இருக்கிறார்கள்.

இதில் பயந்து அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்திருக்கிறார். அதன் பிறகு அடுத்தாள் துறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யத் துறையூர் போலிசார்பு கோட்டாத்தூர் சென்று பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தப்பியோட பெரியண்ணன் மற்றும் பரத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இதே போன்று கிராமபுரம் சார்ந்த பகுதியில் வேலைசெய்யும் பெண் ஊழியர்களுக்கு இதே போன்று தொடர்ந்து தொந்தவுகள் இருந்து கொண்டிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் பெண் ஊழியர்கள்.