Advertisment

வாடிக்கையாளர் பெயரில் பல லட்சம் ரூபாய் சுருட்டல்; வங்கி மேலாளர் மீது வழக்கு!

 Rolling several lakhs of rupees in the name of the customer; A case against the bank manager!

சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் மணிகண்டன் (27). இவர், தர்மபுரிசாமியாபுரம்கூட்டுசாலையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் கடந்த ஆண்டுஅக். 29ம் தேதி வரையிலானகாலக்கட்டத்தில்வங்கி பரிவர்த்தனை விவரங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

Advertisment

இதில், கிளை மேலாளர் மணிகண்டன், இவ்வங்கியில் கடன் பெற்ற 12 வாடிக்கையாளர்களின் பெயர்களில், அவர்களுக்கே தெரியாமல் கூடுதல் கடன் தொகையை வரவு வைத்து மோசடி செய்திருப்பதும், அதன் மூலம் 8.71 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதும் தெரிய வந்தது. மண்டல மேலாளரின் முன் அனுமதி பெறாமல், 54 ஆயிரம் ரூபாயைபண்டிகைக்காலமுன்பணமாகதன்னிச்சையாகதனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு கிராம வங்கியின் மேலாளர் பாஸ்கர், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

case police manager bank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe