Advertisment

கல்குவாரியில் பாறை சரிவு! லாரியில் சிக்கிய டிரைவர்! மீட்க போராடும் தீயணைப்புத்துறை! 

Rockfall in Calcutta! The driver trapped in the truck! Fire Department fighting to recover!

Advertisment

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தை அடுத்த காங்கேயம்பாளையம் கிராமத்தில் ஒரு தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை நாமக்கலை சார்ந்த முத்துச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 300 அடி ஆழம் கொண்ட அந்த கல் குவாரியில் இருந்து கருங்கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டு மேலே உள்ள கிரசருக்கு கொண்டு வருவது வழக்கம்.

டிப்பர் லாரியில் கற்களை ஏற்றிக் கொண்டு சேங்கலை அடுத்த பாப்பையம்பட்டியை சார்ந்த சுப்பையா என்பவர் குவாரிக்குள் இருந்து மேல் பரப்பிற்கு ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். சுமார் 150 அடி ஆழத்தில் வந்து கொண்டிருந்த போது பக்கவாட்டில் இருந்த ராட்சத பாறைகள் பெயர்ந்து குவாரிக்குள் அமைக்கப்பட்டுள்ள சாலையில் விழுந்தது. அப்போது அங்கு வந்த டிப்பர் லாரியின் மீதும் விழுந்து மூடியது. அப்போது, டீசல் டேங்க் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. அதில் ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் பணியில் குவாரியின் கிழ் பகுதியில் இருந்த 2 பொக்ளின் ஆப்ரேட்டர்கள் ஈடுபட்டனர். அவர்களால் இரவு நேரத்தில் மீட்க முடியாத நிலையில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், பரமத்தி காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு நேரம் என்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அடுத்து, இன்று காலை முதல் அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை, காவல் துறை வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

karur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe