Advertisment

கீழே கிடந்த ராக்கெட் லாஞ்சர்கள்; எடைக்கு போட முயன்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்

The rocket launcher exploded and the old man was seriously injured

செங்கல்பட்டில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை உடைத்த பொழுது விபத்து ஏற்பட்டு முதியவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் கை எரி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமந்தபுரம் மலைப்பகுதியில் வெடிக்காமல் கீழே ராக்கெட் லாஞ்சர்கள் கிடந்துள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்ற முதியவர் இரும்பு, பித்தளை கடையில் போடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisment

இந்நிலையில் ராக்கெட் லாஞ்சர்களை எடைக்கு போடுவதற்காகஉடைத்த பொழுது திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் காயமடைந்த கோதண்டராமன் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chengalpattu police Rocket village
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe