r raja

Advertisment

திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் 4 கொலை வழக்குகள் மற்றும் 16 கொலைமுயற்சி வழக்குகள் போன்ற பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் ராக்கெட் ராஜாவை போலீசார் தீவிரமாகதேடிவந்தனர். மேலும், பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவை போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டியன் என்கிற ராக்கெட்ராஜா ரவுடித்தொழிலில் 25 ஆண்டுகளை நிறைவு பெற்றதை அடுத்து நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது ராக்கெட் ராஜாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

rr

Advertisment

rrr