வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சந்தை கோட்டையூர் அப்பாச்சி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 35 இளைஞரான அவின்குமார். இவர் கோடியூரில் நகை அடகு கடை வைத்துள்ளார்.

ஜீன் 6 ந்தேதி இரவு 8 மணியளவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு அன்று அடகுக்கு வந்த நகை, கடையில் இருந்த பணம் போன்றவற்றை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மார்க்கெட்க்கு வந்த தனது தாயாரை வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

Advertisment

robbery

Advertisment

அப்போது பழைய வாரச் சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்பக்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தை மறிந்து நின்றது. அவின்குமார் சடார் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியுள்ளார்.

அந்த வாகனத்தில் வந்த இருவர் அவின்குமார் வைத்திருந்த 12.4 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்துக்கொண்டு அவர்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே சென்று இருட்டில் மறைந்துள்ளனர்.

இது குறித்து அவின்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையர்களை தேடச்செல்ல செலவுக்கு பணம் தா என அந்த வியாபாரியிடம் மிரட்டி பணம் வாங்கியுள்ளனர் போலிஸார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.