Advertisment

வழிப்பறி கொள்ளை; அரிவாள் வெட்டு... கொள்ளையர்களைத் தேடும் காவல்துறை

Robbery in Trichy Police searching for robbers!

Advertisment

சென்னை கல்பாக்கத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் தற்போது திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இடையப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சமயபுரம் டோல்கேட் அருகே பணமங்கலம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் கருணாமூர்த்தியை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe