தீபாவளி கொண்டாட மகள் வீட்டிற்கு சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி... போலீசார் தீவிர விசாரணை..!

1_6.jpg

திருச்சி மண்ணச்சநல்லூர் பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். வெளிநாட்டில் பணியாற்றிவரும் நிலையில், இவரது மனைவி லதா மட்டும் பெரகம்பியில் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், சென்னையில் வசிக்கும் தன் மகள் வீட்டிற்கு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு கடந்த 2ஆம் தேதி லதா சென்றுள்ளார்.

2_5.jpg

7ஆம் தேதி காலை கிளம்பி லதா பெரகம்பிக்குத் திரும்பியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்டிருப்பதால் சந்தேகமடைந்தஅக்கம்பக்கத்தினர் வீட்டைப் பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து லதாவிற்கு தகவல் தெரிவித்தனர். லதா வந்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருட்டு கும்பல், பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 138 பவுன் மதிப்பிலான தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி பொருட்கள்,1.5 லட்சம் மதிப்பிலான வைர தோடு, 30ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.

3_2.jpg

இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும்மோப்பநாய் ஸ்பார்க் தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி சரவண கார்த்தி மற்றும் எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் ஆய்வுசெய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து எஸ்.பி. மூர்த்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Robbery trichy
இதையும் படியுங்கள்
Subscribe