Robbery of temple goods; 10-year-old girl passed away after being attacked by youths

கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 10 வயது சிறுமி உயிரிழந்தார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளனூர் பகுதிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கோவில்களில் தரிசனம் செய்வது போல் வந்து அங்குள்ள வெண்கலப் பொருட்களை திருடிக்கொண்டு சென்றுள்ளது. தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஆட்டோவில் தப்ப முயன்ற கும்பலை இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்தனர்.

Advertisment

ஆட்டோவிலிருந்து அவர்களை இறக்கிய பொதுமக்கள் கடுமையாகத்தாக்கியுள்ளனர். இதில் ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த கும்பலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளைக் கும்பலிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் திருட்டு வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில், கும்பலுடன் சேர்ந்து தாக்கப்பட்ட 10 வயது சிறுமியான நாரயணின் மகள் கற்பகாம்பாள்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.