Advertisment

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை - குலசாமி கும்பிடச் சென்றபோது திருடர்கள் கைவரிசை!

Robbery at Sub Inspector's house in Rajapalayam

ராஜபாளையம் 11வது போலீஸ் பட்டாலியன் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகபணிபுரிகிறார் கோமதிநாயக கண்ணன். ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ்காந்தி நகரில்வசிக்கும் இவர், சிவராத்திரியை முன்னிட்டு குடும்பத்தினருடன்குலசாமியை வழிபட அருகிலுள்ள குன்னூர் சென்றார். மறுநாள் எதிர்வீட்டில்குடியிருப்பவர் கோமதிநாயக கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு,“உங்க வீடு திறந்து கிடக்கு..” என்று தகவல் கூறியிருக்கிறார்.

Advertisment

உடனேகோமதிநாயக கண்ணன் வீட்டுக்கு கிளம்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டுவீட்டிற்குள் பெட்ரூம், பூஜை அறையில்இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதும், 3 பீரோக்களில் இருந்த 30 பவுன்நகை,ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும்கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Advertisment

இதையடுத்து கோமதிநாயக கண்ணன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்ஸ்பெக்டர் கீதாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

rajapalaym Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe