Robbery at a popular jewelery shop in Vellore!

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலூர் க்ரீன் சிக்னல் பகுதிக்கு அருகில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரதான சாலையில் உள்ள இந்தக் கடையில் திருட்டு நிகழ்ந்துள்ளது. இரவு 10 மணிவரை கடை செயல்பட்ட நிலையில், இரவு 12 முதல் அதிகாலைக்குள் இந்தத் திருட்டு நிகழ்ந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.நகைக்கடையின் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கீழ் தளத்திலிருந்த நகைகளை அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

புகாரைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட எஸ்.பி. மற்றும் வேலூர் சரக டிஐஜி தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டுதிருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் இதேபோல் துளையிட்டு கொள்ளை நிகழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.