Advertisment

நடிகர் பிரபு வீட்டு வாசலில் நடந்த துணிகர கொள்ளை! - சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு!

cctv

Advertisment

சென்னை தி.நகரில் நடிகர் பிரபு வீட்டு வாசலில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பிரபு போலீசில் ஒப்படைத்துள்ளார்.

சென்னையில் சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன்களை பறிப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 10ஆம் தேதி மட்டும் சென்னையில் ஒரே நாளில் 17 இடங்களில் வழிப்பறி சம்பவம் நடந்தது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறை சுழற்சி முறையில் காவலர்களுக்கு பணிகளை மாற்றியமைத்து இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்தனர். இந்தநிலையில், கடந்த 12ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டு வாசல் அருகே ஜார்ஜ் என்ற நபர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை இருசக்கரத்தில் வந்த 4 வாலிபர்கள் பின்னால் துரத்தி வந்து அவரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அனைத்தும் நடிகர் பிரபு வீட்டு வாசலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை தாமாக முன்வந்து நடிகர் பிரபு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, பிரபு ஒப்படைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை தி.நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டும், வாகன சோதனைகள் தீவிரமாகப்பட்டும் கொள்ளை சம்பவம் சற்றும் குறையாததது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chain snatching Robbery snatching.
இதையும் படியுங்கள்
Subscribe