Advertisment

பீரோவில் வைத்திருந்த பணம் கொள்ளை! 

Robbery of money kept in the bureau!

திருச்சி மாவட்டம், லால்குடி புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்வர் ரெங்கராஜன் (66). இவர், கடந்த 19ஆம் தேதி தனக்கு சொந்தமான 14.5 சென்ட் இடத்தை விற்பனை செய்து 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். அதனை அவர் தன்னுடைய வீட்டு பீரோவில் வைத்திருந்த நிலையில், அந்த பணத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தன் மகனின் திருமணத்திற்கு தேவையான நகை மற்றும் துணிவாங்க செலவழித்துள்ளார்.

Advertisment

மேலும் 1 லட்சம் ரூபாய் பணத்தை தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார்.ஒருசில நாட்களுக்கு பிறகு அவர் பீரோவை திறந்து பார்த்தபோது6 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கல்லக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை சேகரித்ததோடு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisment

police Theft trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe