Advertisment

மண்ணச்சநல்லூரில் பூட்டப்பட்ட வீட்டில் கொள்ளை... போலீசார் விசாரணை!

Robbery at a locked house in Mannachanallur ... Police investigation!

திருச்சி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோபால். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் இவரது மனைவி வசந்தியும் கடந்த 27ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

Advertisment

கடந்த 3 ஆம் தேதி வீட்டிற்கு மீண்டும் வந்த அவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்குக் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளைப் பதிவு செய்ததோடு வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisment

Investigation police Robbery thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe