robbery incident in kovai

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருபவர் மணிகண்டன். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் திருமணங்களில் உணவு பரிமாறும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

சம்பவத்தன்று கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வேலையை முடித்துக்கொண்டு இரவு விடுதிக்கு செல்வதற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மணிகண்டனும் அவரது நண்பரும் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டியதோடு, மணிகண்டன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றார்கள்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகார் அளிக்க, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பரான விஜய மணிகண்டன் ஆகியோரை பிடித்தனர். விசாரணையில் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் கைதான இருவரும் பட்டதாரி இளைஞர்கள் எனவும் செலவுக்காக இதுபோன்ற குற்றசெயலில் ஈடுபட்டு வந்ததும் தெரிவந்துள்ளது.இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.