
சிதம்பரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே அண்ணாமலைநகர் பகுதிக்குட்பட்ட மாரியப்பா நகர், 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் (73). இவர் கடந்த மாதம் 18-ம் தேதி குஜராத்தில் உள்ள தனது மகனை பார்ப்பதற்கு சென்றிருந்தார். இந்நிலையில் செப் 3-ந்தேதி மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு வீட்டுக்குள் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை மற்றும் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இவரது மகன் ரஞ்சித்குமார் குஜராத் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)