வேலை வாய்ப்புத் துறை ஊழியர் வீட்டில் கொள்ளை...

Robbery at Employment department employee  home ...

விழுப்புரம் அடுத்துள்ள வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் புதுச்சேரியில் உள்ள வேலை வாய்ப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் இவர் மனைவி தமிழ்ச்செல்வி, இருவரும் கடந்த 19ஆம் தேதி திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரும்பட்டு கிராமத்தில் இருக்கும், அவர்களது மூத்த மகன் சிலம்பரசன் வீட்டிற்குச் செல்வதற்காக தங்கள் வீட்டை பூட்டிச்சென்றுவிட்டனர்.

பின் 21ஆம் தேதி, மூத்த மகன் வீட்டில் இருந்து, மதியம் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் இருவரும் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ, உடைக்கப்பட்டு அதிலிருந்த, 12 பவுன் நகை மற்றும் 300 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.7 ஆயிரம் பணம் உட்பட சுமார் மூன்றே முக்கால் லட்சம் மதிப்புள்ள பணம், நகை, வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சேகர், வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe