Advertisment

மூடப்பட்ட நிறுவனத்தில் கொள்ளை! இருவர் கைது

Robbery in a closed company! Two arrested

Advertisment

திருச்சி மாவட்டம்,நவல்பட்டுபெரிய சூரியூர் பகுதியில்சையத்அலி என்பவர் ஒருமினரல்வாட்டர்நிறுவனத்தை நடத்திவந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அவரது தொழிலில் நஷ்டம் ஏற்படவே, அவர் தனது தொழிற்சாலையை மூடியுள்ளார். ஆனால்,தொழிற்சாலையிலிருந்தஉபகரணங்களை அப்படி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், தனது நிறுவனத்தை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரதுநிறுவனத்தில் இருந்தசில பொருட்கள் காணாமல் போயிருந்தது. இது குறித்துசையத்,நவல்பட்டுகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த விசாரணையில்,திருவரம்பூர்பகுதி சேர்ந்த பாரதி(20), முரளி(19), சூர்யா(19) ஆகிய மூன்று பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைதுசெய்யத்திட்டமிட்டு அவர்கள் இருந்தஇடத்திற்குச்சென்றுள்ளனர். அப்போது, பாரதி மற்றும் முரளி மட்டுமே காவல்துறையிடம் சிக்கியுள்ளனர். சூர்யா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.பிடிபட்டஇருவரையும் கைது செய்த காவல்துறையினர்அவர்களைக்காவல்நிலையத்திற்குஅழைத்து சென்றுவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பித்தசூர்யாவைத்தீவிரமாகத்தேடிவருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe