Robbery at Chennai High Court lawyer's house!

Advertisment

சென்னையை அடுத்த புழல் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து, 78 சவரன் நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞரான பார்த்திபன் என்பவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து, 78 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 50,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்த புகாரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்து துப்புத்துலக்கி வருகின்றனர் புழல் காவல்துறையினர்.