cell phone

Advertisment

கோவையில் வீடு புகுந்து செல்போன்களை திருடும் நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வைத்திருந்த செல்போன்கள் திடீர் திடீரென காணாமல் போகின்றன என்று ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எந்திரன் 2.0 போல செல்போன்கள் காணாமல்போகின்றன என்கிற புகார்கள் போலீசை குழப்பியது.

இதனைத் தொடர்ந்து, பட்டப்பகலில் வீடுகளுக்குள் தைரியமாக நுழைந்து செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

Advertisment

அதன்படி, சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரைப் பிடித்தபோது, அவன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர நாதன் என்பவரது மகன் நவீந்திர நாதன் என்பது தெரியவந்தது.

கோவையில் வெவ்வேறு வீடுகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதை அவன் ஒப்புக் கொண்டான்.இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் நவீந்திர நாதனிடம் இருந்து 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.