Advertisment

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வங்கியில் கொள்ளை.. 4 தனிப்படை அமைப்பு!

Robbery in the bank by giving anesthesia to the security guard.. 4 special forces!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'பெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது.

Advertisment

இதுதொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த வங்கியிலேயே பணியாற்றி வந்த முருகன் என்ற ஊழியர் தனக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்ததாகவும், அதனை குடித்த பின் தான் மயங்கி விட்டதாகவும் வங்கியில் காவலாளி தெரிவித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

bank Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe