Advertisment

ஆடிட்டர் வீட்டில் கொள்ளை... தீவிர விசாரணையில் போலீஸ்!

Robbery at auditor's house

திருச்சி கொண்டையன் பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் குமார்(62). கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது மகளை சேர்த்து வேலைக்கு விடுவதற்காக அவர் சென்றுள்ளார். அதன் பின்பு நேற்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கவே ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, 30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்ததும், பீரோவில்தனியாக வைக்கப்பட்டிருந்த இருபதாயிரம் மட்டும் திருடு போகாமல் இருந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

Theft thief trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe