சென்னையில் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்கும் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் 30 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
இதனிடையே, சென்னை சாந்தோமில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவிப் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து வந்த ஆனந்த் என்பவர் பணம் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை திரும்பியதாகவும் வறுமையால் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவிப் பொருத்திப் பணம் திருட முயன்றததும் தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.