திருச்சி காவிரிப்படுகைகளில் மணல் கொள்ளை என்பதும்,கள்ளத்தனமாக திருடுவது என்பதும்வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகள் கூட்டணி போட்டு கொள்ளையடித்தக்கொண்டிருக்கிறார்
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்திற்கு ஏசியாக பதவி ஏற்றார் இராமசந்திரன். இவர் பொறுப்பேற்ற பிறகு மணல் மாபியா கொள்ளையர்கள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களை குறித்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். இதனால் இந்த பகுதியில் மணல் கொள்ளையர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நிலையில் தீடிர் என காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் தலைமையில் அனுப்பி வைத்தனர். அவர் சென்ற அடுத்த நாளே ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் இருந்தே மணல் கொள்ளையர்களுக்கு தகவல் சென்று, நாளை முதல் ஏசி ஊரில் இல்லை. அவர் வருவதற்குள் எவ்வளவு எடுக்க முடியுமோ எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுப்பதற்கு கப்பம்கட்ட வேண்டியதை முதலிலே கட்டிவிடுங்கள். அப்பதான் நாங்கள் மேல் அதிகாரிக்கு கப்பத்தை கட்ட முடியும் என்று பணத்தை வாங்கி கொண்டு மணல் கொள்ளைக்கு வழிவிடப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீரங்கம் பகுதியில் மணல் கொள்ளையர்கள் காட்டில் பண மழையே கொட்டுகிறதாம்.
இதை அத்திவரதர் நிகழ்ச்சியில் இருக்கும் ஏசிக்கு தகவல் தெரிந்ததும் கொதித்துப்போன ஏசி இராமசந்திரன், மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருக்கும் அந்த கருப்பு ஆடு யார்என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அத்திவரதர் முன்பு சபதம் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.