Robbers who robbed and urinated at home

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது சந்தப்பேட்டை. இந்த பகுதியில் வசிக்கும் மேஸ்திரியான தேவராஜ் என்பவர் தனது மனைவி கஸ்தூரியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் படித்து வரும் தனது இரண்டு பிள்ளைகளை பார்ப்பதற்காக கடந்த 6ஆம் தேதி சென்னைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகாமையில் இருந்தவர்கள் தேவராஜ்க்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தேவராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை பூஜை சாமான்கள், 50,000ரூபாய் மதிப்பிலான LED டிவி, 15 ரூபாய் ரொக்க பணம் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருப்பதும் வீட்டின் வெவ்வேறு இடங்களில் திருடர்கள் சிறுநீர் கழித்து இருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தேவராஜ் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் கொள்ளையடித்து விட்டு சிறுநீர் கழித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.