/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/money-in.jpg)
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ளது திருவக்கரை. இங்குள்ள சந்திரமவுலீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் பழனி கல்லுடைக்கும் ப்ளூ மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 29ம் தேதி இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மகனிடம்கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படை கொள்ளையர்களைத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் போலீசார் செங்கமேடு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக இரு பைக்குகளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திருக்கனூர் அடுத்துள்ள சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கார்மேகம் வயது 19, மோகன் மகன் அருளரசன் வயது 19, அண்ணாமலை மகன் அப்பு என்கிற செந்தில்குமார் வயது 19, செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முரளி வயது 27 என்பது தெரியவந்தது. இதில் தமிழ்வாணன் தலைமையில் 6 பேர் சேர்ந்து பழனி வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் சிக்கியுள்ள முரளி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனியிடம் கார் டிரைவராக வேலை செய்து பின் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். பழனி வீட்டில் பணி செய்தபோது, அவரது வீடில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த முரளி இந்த கொள்ளைக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடும்போது தாக்குவதற்காக 3 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தனர். அவைகளை கைப்பற்றிய போலீசார் மேலும் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய செல்போன்கள் தங்க நகைகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களின் கூட்டாளி தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)