Robberies snatch the chain at midnight

புதுச்சேரி மாநிலம் கன்னியகோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனது மனைவி சசிகலா மற்றும் மகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலியத்துர் கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்தபடி தனியார் கம்பெனி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

Advertisment

அப்போது நள்ளிரவில் வீடு புகுந்த நாலு மர்ம நபர்கள் பிரபாகரன் மனைவி சசிகலாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர். சசிகலாவின் கழுத்தில் இருந்து தாலி செயினை திருடர்கள் பறிக்கும்போது சசிகலா சத்தம்போட்டு அலறினார். அவரது சத்தம்கேட்டு எழுந்த பிரபாகரன், மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார்.

Advertisment

அவர்கள் அவரது தலையில் கட்டையால் தாக்கிவிட்டு தாலிசெயினை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த பிரபாகரன் சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக், நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை பிடிப்பதற்கான தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.