Skip to main content

காவல் ஆணையரின் உத்தரவைத் தொடர்ந்து சீர் செய்யப்பட்ட சாலைகள்! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Roads repaired following the order of the Commissioner of Police!

 

தமிழ்நாடு முழுக்கவே கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது. இன்னும் சில இடங்களில் மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில், மழையால் பாதிக்கப்பட்டு சிதலமடைந்த சாலைகளை சரிசெய்ய காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார். 

 

திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலைய சுற்று பகுதிகளிலும், அண்ணா சிலை ரவுண்டானா உள்ளிட்ட சாலைகளிலும், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி மெயின் ரோட்டிலும் தற்காலிகமாக மண் மற்றும் கல்லை கொட்டி சாலையை சீர்செய்து பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், இதுபோன்று கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா, ராக்கின்ஸ் ரோடு, ஸ்டேட் வங்கி மெயின் ரோட்டிலும், தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரகாளியம்மன் கோயில் முதல் அண்ணா நகர் மற்றும் சாஸ்திரி ரோடு வரை உள்ள சிதலமடைந்த சாலைகள் கண்டறியப்பட்டு அதனை சரி செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல், மழை நேரங்களில் சாலையில் மோட்டார் வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்தும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்