Advertisment

ரூபாய் 2 ஆயிரம் உதவித்தொகை கணக்கெடுப்பில் குளறுபடி: கதிராமங்கலத்தில் போராட்டம்

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் அரசு உதவித் தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பில் குளறுபடி நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தமிழ அரசு குடும்ப அட்டைக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளது. அதனை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

road

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் அரசு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பில் பெரும் குளறுபடி நடப்பதாகவும், ஏழைத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பில் விடுபடுவதாகவும் கூறி கல்லணை பூம்புகார்குடி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

போராட்டத்தை கேள்விப்பட்ட வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தனர். அதன் பிறகே பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். பொதுமக்களின் சாலை மறியலால் கல்லணை- பூம்புகார் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

kathiramangalam Kumbakonam protest Road
இதையும் படியுங்கள்
Subscribe