Skip to main content

குடிதண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

கீரமங்கலம் பர்மா காலனி பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றும் பழுதான மின்மோட்டாரை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

 

The people stormed the road to the demolition of the people drinking water in keramangalam


 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பகுதிக்கு குடிதண்ணீர் கொடுப்பதற்காக சுமார் 10 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து குடிதண்ணீர் வழக்கி வருகின்றனர். இந்த நிலையில் மின் பற்றாக்குறை மற்றும் மோட்டார்கள் பழுது காரணமாக அடிக்கடி ஒவ்வொரு பகுதிக்கும் குடிதண்ணீர் பிரச்சணை ஏற்பட்டு வருகிறது. அதே போல 2 வது வார்டு பர்மா காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிதண்ணீர் ஏற்றும் நீர்மூழ்கி மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டதால் 15 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்கவில்லை. நீர்மூழ்கி மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிதண்ணீர் கிடைக்கும் என்று காத்திருந்த பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அருகில் உள்ள செரியலூர் இனாம் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய ஆழ்குகுழாய் கிணறுகளில் தண்ணீர் எடுத்துள்ளனர். 
 

The people stormed the road to the demolition of the people drinking water in keramangalam


 

இந்த நிலையில் 15 நாட்களாக நீர்மூழ்கி மோட்டார் பழுது நீக்கவில்லை என்பதாலும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் செய்தனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த கீரமங்கலம் போலிசார் சமாதானம் செய்து விரைவில் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்