Skip to main content

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 06/02/2021 | Edited on 07/02/2021

 

 

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சென்னை புது வண்ணாரப்பேட்டையில், திருத்தங்கல் நாடார் கல்லூரி மாணவர்கள் மற்றும் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், சூரிய நாராயண மூர்த்தி சாலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.