வாங்க வாழ்ந்து காட்டுவோம்... காவல் உதவி ஆய்வாளரின் அழைப்பு...

Road rules Awareness

தினந்தோறும் வாகனங்கள் பெருகிக்கொண்டிருக்கிறது. தினந்தோறும் வாகன விபத்துக்களும் பெருகிக்கொண்டிருக்கிறது. வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு எவ்வளவோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் சாலை விதிகளை பலர் கடைப்பிடிப்பதில்லை.

அதனால் மக்களுக்கு புரியும்படியாகவும், நகைச்சுவையாகவும், நயமாகவும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் வழிகாட்டுதல்படி குறிஞ்சிப்பாடி காவல்துறை உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் தலைமையில் குறிஞ்சிப்பாடி காவலர்கள் குறிஞ்சிப்பாடி பகுதியில் புதுவிதமாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

Road rules Awareness

இரு சக்கர வாகனங்களை இயக்கும் போது தலை கவசம் அணியவேண்டும், கைபேசி பேசி கொண்டு வாகங்களை இயக்ககூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டகூடாது, கார்களை இயக்கும் போது சீட்பெல்ட் அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் மிதமான வேகத்தில் பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தும் விதமாக எமதர்ம ராஜா, சித்திர குப்தன் வேடங்களை அணிந்தவர்கள் மூலம் வாகனவோட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

போலீசாரின் இந்த விழிப்புணர்வு முறை பொதுமக்களை கவர்ந்தது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளதாக மக்கள் காவல்துறையினரை பாராட்டினர்.

இந்த விழிப்புணர்வு செய்துவந்த போது தலை கவசம் அணிந்து வந்தவர்களுக்கும், கார்களில் சீட்பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புளை வழங்கி குறிஞ்சிப்பாடி உதவி ஆய்வாளர் பிரசன்னா பாராட்டினார்.

awareness Road rules
இதையும் படியுங்கள்
Subscribe