போட்ட சில நாட்களில் தார் சாலை பழுது... அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலை நாசமானது

புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பேரூராட்சியை சேர்ந்த ஜமியத்நகர் விரிவு(அபிஷேக் நகர்) சாலை வானூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ₹ 10 லட்சம் மதிப்பீடில் , சாலையை மேம்படுத்தி, புதிய தார் சாலை அண்மையில் அமைக்கப்பட்டது.

road in pathetic condition

5 மாதத்தில் தார் சாலை பாளம்,பாளமாக வெடித்து, அதற்கு பெயரளவில் சரி செய்யப்பட்டது. ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் படு மோசமான நிலை அடைந்தது. தற்போது, பெய்த லேசான மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை நிலவுகிறது.

road in pathetic condition

இதனை விழுப்பபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கையை 15 நாட்களில் கவனிக்கப்படவில்லை என்றால், கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்த அப்பகுதி இளைஞர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

damage roads villupuram
இதையும் படியுங்கள்
Subscribe