எம்.எல்.ஏ. நிதியிலிருந்து சாலை! ஜெயங்கொண்டம் உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்! 

Road from the MLA  fund! Jayangondam member laid the foundation!

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலான சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார்.

இதன் மூலம், தா.பழூர் கிழக்கு ஒன்றியம், தென்கச்சி பெருமாள்நத்தம், கோடாலி கருப்பூர் ஆகிய ஊராட்சிகளில் சாலைகள் மேம்படும். இந்நிகழ்வில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், அன்புச்செல்வன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.சூசைராஜ், த.நாகராஜன், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

jayankondam
இதையும் படியுங்கள்
Subscribe