Skip to main content

ஒரு ஆலமரத்தை வெட்டியதற்காக 100 ஆலம் கிளைகளை நட்ட சாலைப் பணியாளர்கள்!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

கீரமங்கலத்தில் நின்ற ஒரு பழமையான ஆலமரத்தை வெட்டி அகற்றியதற்கு பதிலாக 100 ஆலமரக் கிளைகளை ஊன்றியுள்ளனர் சாலை பணியாளர்கள். சாலைப் பணியாளர்களின் இந்த பணியை சமூக ஆர்வலர்கள் பாராட்டிவருகின்றனர். 

 

nature

இந்தியாவின் தேசிய மரமான ஆலமரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கில் நின்ற ஆல மரங்கள் சாலை விரிவாக்கத்தினால் வெட்டி அகற்றப்பட்டு தற்போது  ஒன்று இரண்டாக நிற்கிறது. அதே போல தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலும் ஏராளமான ஆலமரங்கள் சாலை ஓரங்களில் இருந்து அகற்றப்பட்டு சில மரங்கள் மட்டுமே நிற்கும் நிலையில் வியாழக் கிழமை காவல் நிலையம் அருகில் நின்ற ஒரு ஆலமரம் வேரோடு வெட்டி அகற்றப்பட்டது. அந்த மரம் சாலையில் விழுந்து விபத்து ஏற்படுத்தும் என்பதால் அகற்றப்பட்டதாக நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அந்த மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இந்த மரத்தில் உள்ள கிளைகளை சாலை ஓரங்களில் நட்டு ஆலமரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆலமரக் கிளைகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று ஊராட்சிகளில் அந்த பணிகள் நடந்துள்ளது.

 

nature

 

இந்த நிலையில் தான் கீரமங்கலத்தில் வெட்டி அகற்றப்பட்ட ஒரு ஆலமரத்திற்கு பதிலாக 100 ஆலமரங்களை உருவாக்குவோம் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதுடன் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை நேர்த்தியாக வெட்டி சாலை பணியாளர்கள் மூலம் கீரமங்கலத்தில் இருந்து பட்டுக்கோட்டை -  அறந்தாங்கி சாலையில் பல இடங்களிலும் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படாத நிலையிலும் ஆலமரக் கிளைகளை நட்டனர். 

 

ஆபத்தான ஒரு மரத்தை வெட்டினாலும்..  ஆலமரங்களை அழிவில் இருந்து காப்பாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஒரே நேரத்தில் 100 கன்றுகளை நடவு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று பொதுமக்கள் சாலைப் பணியாளர்களை பாராட்டினார்கள். மேலும் இதே போல சாலை விரிவாக்கம் செய்யும் போது வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கிளைகளையும், மரக்கன்றுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைத்து வளர்க்க வேண்டும் என்றனர் பொதுமக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

“15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு...” - தமிழக அரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Committee to negotiate 15th Wage Agreement TN Govt

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறையினருக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை, போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அரசு சார்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் நடைபெற்று வந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது தமிழக அரசு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குழுவில் நிதித்துறையின் கூடுதல் செயலாளர், தமிழக போக்குவரத்து கழகங்களின் 8 மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார். 

Next Story

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விபரம்!

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Information about buses operating across Tamil Nadu

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 32 பேருந்து பணிமனைகளில் இருந்து காலை 06.30 மணி வரை 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மண்டலத்தில் 77 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 1298 பேருந்துகளில் 993 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூரில் இருந்து 73 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 135 பேருந்துகளில் 99 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 97 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 399 பேருந்துகளில் 387 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல்லில் இருந்து 100 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 47 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை மண்டலத்தில் 95 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 1218 பேருந்துகளில் 1163 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மண்டலத்தில் 83 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 1927 பேருந்துகளில் 1599 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சியில் இருந்து 69 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 396 பேருந்துகளில் 272 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சாவூரில் இருந்து 72 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் 226 பேருந்துகளில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மண்டலத்தில் 72 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது வழக்கமாக இயக்கப்படும் 226 பேருந்துகளில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 93 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.