கீரமங்கலத்தில் நின்ற ஒரு பழமையான ஆலமரத்தை வெட்டி அகற்றியதற்கு பதிலாக 100 ஆலமரக் கிளைகளை ஊன்றியுள்ளனர் சாலை பணியாளர்கள். சாலைப் பணியாளர்களின் இந்த பணியை சமூக ஆர்வலர்கள் பாராட்டிவருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aalam pothu 28.jpg)
இந்தியாவின் தேசிய மரமான ஆலமரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கில் நின்ற ஆல மரங்கள் சாலை விரிவாக்கத்தினால் வெட்டி அகற்றப்பட்டு தற்போது ஒன்று இரண்டாக நிற்கிறது. அதே போல தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்திலும் ஏராளமான ஆலமரங்கள் சாலை ஓரங்களில் இருந்து அகற்றப்பட்டு சில மரங்கள் மட்டுமே நிற்கும் நிலையில் வியாழக் கிழமை காவல் நிலையம் அருகில் நின்ற ஒரு ஆலமரம் வேரோடு வெட்டி அகற்றப்பட்டது. அந்த மரம் சாலையில் விழுந்து விபத்து ஏற்படுத்தும் என்பதால் அகற்றப்பட்டதாக நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அந்த மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இந்த மரத்தில் உள்ள கிளைகளை சாலை ஓரங்களில் நட்டு ஆலமரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆலமரக் கிளைகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று ஊராட்சிகளில் அந்த பணிகள் நடந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aalamaram 12_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிலையில் தான் கீரமங்கலத்தில் வெட்டி அகற்றப்பட்ட ஒரு ஆலமரத்திற்கு பதிலாக 100 ஆலமரங்களை உருவாக்குவோம் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதுடன் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை நேர்த்தியாக வெட்டி சாலை பணியாளர்கள் மூலம் கீரமங்கலத்தில் இருந்து பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் பல இடங்களிலும் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படாத நிலையிலும் ஆலமரக் கிளைகளை நட்டனர்.
ஆபத்தான ஒரு மரத்தை வெட்டினாலும்.. ஆலமரங்களை அழிவில் இருந்து காப்பாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஒரே நேரத்தில் 100 கன்றுகளை நடவு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று பொதுமக்கள் சாலைப் பணியாளர்களை பாராட்டினார்கள். மேலும் இதே போல சாலை விரிவாக்கம் செய்யும் போது வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கிளைகளையும், மரக்கன்றுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைத்து வளர்க்க வேண்டும் என்றனர் பொதுமக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)