தாம்பரம் முதல் திண்டிவனம் வரையிலான சாலையின் நிலை குறித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம்- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்துவிட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி, திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குறிப்பிடும் சாலையின் தற்போதைய நிலை குறித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.