Advertisment

இராஜபாளையம் - சேத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தென்காசி சாலையில் 2 மணி நேரம் மறியல் நடத்தியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையம் அருகிலுள்ள சேத்தூர் கிராமத்தில் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கின்றனர்.

school

Advertisment

நேற்று இங்கு பயிலும் மாணவ மாணவிகளில் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினர் அசிங்கமாகத் திட்டியிருக்கின்றனர். பள்ளி ஆசிரியரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியரைக் கண்டித்தும், அவதூறாகப் பேசிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராஜபாளையத்திலிருந்து செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அவமானத்துக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவிகள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் செய்தனர்.

காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், சாலை மறியலைக் கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.