Advertisment

விராலிமலையில் சாலை விபத்து; ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் போராட்டம்

Road accident in Viralimalai; People are struggle because the ambulance is not comingnn

கோப்புப்படம்

புதுக்கோட்டையில் சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் மோதி 4 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த நான்கு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை ஆம்புலன்ஸ் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அதே நேரம் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கார் ஓட்டுநரை கைது செய்யக் கோரியும், ஆம்புலன்ஸ் வராததைக்கண்டித்தும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Ambulance Pudukottai viralimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe