Road accident two passed away including child

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், கூனவேலம்பட்டியைச் சேர்ந்த ஏழு பேர் இன்று மதியம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மினி வேன் ஒன்றில் சொந்த ஊர் திரும்பினர். காரை முக்கொம்பு, வாத்தலை என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்திவிட்டு 4 பேர் டீ குடிக்க சென்றனர். அப்போது சேலத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த மினி வேன் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

Advertisment

இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் அமர்ந்து இடிபாடுகளில் சிக்கிய ராசாத்தி (வயது 43) என்பவரும், ரக்க்ஷனா என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பெண், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment