Advertisment

துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Road accident three passed away in one family

ராணிப்பேட்டை மாவட்டம், கலைவை தாலுக்கா கீரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன்(60). இவருடைய தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மதுரையில் உயிரிழந்தார். நேற்று அவருக்கு முப்பதாம் நாள் துக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முத்து ராஜேந்திரன், அவரது மனைவி சாந்தி, அவரது மகன் அழகுவேல் ராஜா மற்றும் மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி(22) ஆகியோர் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் - செஞ்சி வழியாக தங்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது, வளத்தி - அருள் நாடு கல்லறை அருகே அதிகாலை 3 மணி அளவில் எதிர்பாராத விதமாக செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது, கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் அவருடைய மனைவி சாந்தி மற்றும் அவரது மகன் அழகு ராஜா உள்ளிட்ட மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மதுரையைச் சேர்ந்த சகுந்தலா தேவி பலத்த காயம் அடைந்துள்ளார்.

Advertisment

சம்பவத்தை அறிந்த செஞ்சி டி.எஸ்.பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம்பட்ட சகுந்தலா தேவியை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சம்பவம் குறித்து வளத்தி போலீசார் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா கொத்தம்வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர்(28) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Viluppuram ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe