Advertisment

இந்தக் காரில் பயணித்தவர் உயிர் தப்பிவிட்டாரா? - வாய் பிளக்கும் மக்கள்! 

Road accident near trichy Medical student recover safely

நாமக்கல் மாவட்டம், பட்லூர் சாலப்பாளையம், குடித்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் யுவராஜ்(29). இவர், திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் சொந்த வேலையாக பெரம்பலூருக்குச் செல்ல தனது காரில் திருச்சியிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

Advertisment

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரியை வேகமாக முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சிமெண்ட் லாரி மீது மோதிவிட்டு பின்னர் மற்றொரு லாரியின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிச் சென்ற யுவராஜ் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்பளம் போல் நொறுங்கிய காரில் பயணித்த மாணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe