தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே, சாலையில் இருசக்கர வாகனத்தில் மணிகண்டராஜா, கன்னிச்செல்வி, மாரியம்மாள் ஆகிய மூன்று பேரும்சென்றுகொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மணிகண்டராஜா, கன்னிச்செல்வி, மாரியம்மாள் ஆகிய மூன்று பேரும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.