Road accident - Father and 8-month pregnant woman lose their live

சென்னை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் தந்தை மற்றும் எட்டு மாத கர்ப்பிணி மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம்ஒன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இந்திராணி(51), மகள் தீபிகா(21) வயது கடந்தசெப்டம்பர் மாதம் தீபிகாவிற்கு திருமணமான நிலையில் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

Advertisment

ஐடி துறையில் வேலை பார்த்து வந்த தீபிகா பிரசவ விடுமுறையில் தாய் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தாய் இந்திராணியின் அண்ணன் பேத்தி பிறந்தநாள் விழாவிற்கு குடும்பத்துடன் அம்பத்தூர் வந்துள்ளனர். பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு நேற்று மூவரும் கால் டாக்ஸி மூலமாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அனகாபுத்தூர் அருகே வரும்போது எதிர்த் திசையில் தாறுமாறாக வந்த கார் ஒன்று இவர்கள் பயணித்த கால் டாக்சி மீது மோதியது. இதில் தந்தை பத்மநாபன் மற்றும் மகள் தீபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்திராணி மற்றும் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.