சிதம்பரம் புற வழி சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருக்கும் போது புறவழி சாலையில் நான்கு வழி பணிக்காக கிரேன் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இயந்திரத்தில் விரைவு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநர் சதாசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணம் செய்த 10-கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓட்டுநரின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் பேருந்தை கிரேன் இயந்திரத்தில் மோதியதாக பயணிகள் மத்தியில் கூறப்படுகிறது.