car

திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிந்தனர்.

Advertisment

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த மூக்கையன் தேவர் குடும்பத்தினர், தேனி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று தங்களது 8 மாத குழந்தைக்கு காது குத்திவிட்டு,ஊட்டியில் குடும்பத்துடன் சுற்றிபார்த்துவிட்டுசென்னை திரும்பினர்.

Advertisment

அப்போது திண்டிவனம் அருகே சாரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. காரில் பயணம் செய்த 7 பேரில் மூக்கையன் மனைவி ராமலட்சுமி, மகன் விஜயகுமார், மருமகள் சபரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத குழந்தை எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியது.

காரை ஓட்டி வந்த குன்றத்தூரைச் சேர்ந்த அருண் விபத்தில் சிக்கினார். மேலும், ஜான்சாமுவேல், வின்சகி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்தவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு திண்டிவனம் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.