Skip to main content

ரஷ்ய புரட்சி தின நிகழ்வில் ஆர்.என்.கே. , தா.பா  

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

ரஷ்ய புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றிய நடவடிக்கை மட்டும் அல்ல புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு "ஜார்" மன்னனை வீழ்த்திய வரலாறும் அதுவே அப்படிப்பட்ட ரஷ்ய புரட்சியின் தினம் இன்று நவம்பர் 7 ந் தேதி . இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட்டுகள் இதை கொண்டாடி வருகிறார்கள்.

 

RNK at Russian Revolution Day event



இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு சார்பில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தலைமையில் மற்றொரு மூத்த தலைவரான தா.பாண்டியன் கொடியேற்றி வைத்து ரஷ்ய புரட்சியின் எழுச்சிமிகு வரலாற்றை கூறினார். இந்நிகழ்வில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபான்டியன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 02/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். இந்த நிகழ்வில், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாச்சலம், மாநிலச் செயலர் இரா.முத்தரசன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். 

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.