Advertisment

"பிப். 14- ஆம் தேதி ஃபெப்சி தேர்தல்" - ஆர்.கே.செல்வமணி பேட்டி!

r.k.selvamani pressmeet at chennai

Advertisment

பிப். 14- ஆம் தேதிஃபெப்சி தேர்தல் நடைபெறும் என்று அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, "திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (ஃபெப்சி) பிப்ரவரி 14-ஆம் தேதி, தேர்தல் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி வெளியிடப்படும். தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் என 13 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும். 23 சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என 69 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். கரோனா ஊரடங்கு நிதியாக ரூபாய் 3.93 கோடியைத் திரை நட்சத்திரங்கள் அளித்துள்ளனர்" என்றார்.

Chennai PRESS MEET r.k.selvamani
இதையும் படியுங்கள்
Subscribe