/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download (49).jpg)
தமிழ்நாடு திரைப்படஃபெப்சிதொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி நிர்வாகிகளுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ரஜினி, கமல், அஜித் ஆகியோர் நிலையைஉணர்ந்துசம்பளத்தை குறைத்துக்கொள்வார்கள். ஃபெப்சி அமைப்பில் உள்ள 50 ஆயிரம் பேரில் 50 பேர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் திட்ட அறிவிப்புகளில்வருடம் 15 ஆயிரம் கோடி ஈட்டும்திரைத்துறைக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்துவது ரொம்ப கடினம் எனவே நாற்பது பேரையாவது அனுமதிக்க வேண்டும் என்றார்.
Follow Us